/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியா கூப்பிட்டு கேளுங்க புட்டுபுட்டு வைக்கிறோம் மண்டல பொறுப்பாளருக்கு உடன் பிறப்புகள் வேண்டுகோள்
/
தனியா கூப்பிட்டு கேளுங்க புட்டுபுட்டு வைக்கிறோம் மண்டல பொறுப்பாளருக்கு உடன் பிறப்புகள் வேண்டுகோள்
தனியா கூப்பிட்டு கேளுங்க புட்டுபுட்டு வைக்கிறோம் மண்டல பொறுப்பாளருக்கு உடன் பிறப்புகள் வேண்டுகோள்
தனியா கூப்பிட்டு கேளுங்க புட்டுபுட்டு வைக்கிறோம் மண்டல பொறுப்பாளருக்கு உடன் பிறப்புகள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 22, 2025 06:34 AM
வி ழுப்புரம் மாவட்டத்தில், பொன்முடி, மஸ்தான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் மீது எழுந்த புகார்கள் காரணமாக தி.மு.க., தலைமை இருவரின் அமைச்சர் பதவியை அதிரடியாக பறித்தது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் இல்லாத நிலை பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, தி.மு.க., தலைமை கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தை விழுப்புரம் மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளராக நியமித்தது. இதனால் பன்னீர்செல்வம் விழுப்புரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் பணியை மேற்கொண்டு வருகிறார்.
மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உடன், கோஷ்டி பிரச்னை செய்பவர்கள், கட்சி பணியாற்றாதவர்களை நேரில் அழைத்த டோஸ் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கட்சி வேலை செய்யாதவர்கள் பட்டியலை தயாரித்து, கட்சி தலைமைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என்று அதிரடி காட்டி, நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தினார்.
ஆரம்பத்தில் புயல் வேகத்தில் சுழன்றவர் நடுவில் சில நாட்களாக காணவில்லை. இதனால், வடக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் நேர்காணலில் தொய்வு ஏற்பட்டது. வடக்கு மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளில், திண்டிவனம் தொகுதியில் மட்டும் பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தியுள்ளார். மற்ற 2 தொகுதிகளான மயிலம், செஞ்சி தொகுதிகளில் நேர்காணல் நடக்காததால் எப்போது நடக்கும் என நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தி.மு.க.,வின் நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்களிடம் ஒன் டூ ஒன் நேர்காணலின்போது, கட்சியின் மற்ற நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு, தனித்தனியாக அழைத்து கட்சியிலுள்ள குறைகளை கேட்கிறார். ஆனால், எங்கள் பகுதி மண்டல பொறுப்பாளர் பன்னீர்செல்வம் திண்டிவனம் தொகுதியில் நேர்காணல் நடத்தியபோது, ஒன்றிய செயலாளர், நகர செயலாளரை வைத்துக் கொண்டுநிர்வாகிகளிடம் குறைகளை கேட்கிறார்.
இவ்வாறு கேட்டால் எங்களால் குறைகளை எப்படி கூற முடியும். முக்கிய நிர்வாகிகளை தவிர்த்து தலைவர் போன்று தனித் தனியாக கேட்டால் குறைகளை புட்டுபுட்டு வைப்போம் என நிர்வாகிகள் புலம்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு மயிலம், செஞ்சி தொகுதிகளில் நடைபெறும் நேர்காணலின் போது, நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்களை தவிர்த்து, நிர்வாகிகளிடம் குறைகளைக் கேட்டால், நிர்வாகிகள் தைரியமாக குறைகளை தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும்.