/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் விண்ணப்பிக்க அழைப்பு
/
விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் விண்ணப்பிக்க அழைப்பு
விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் விண்ணப்பிக்க அழைப்பு
விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 27, 2025 11:01 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு :
விளையாட்டு துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் வரும் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களை பெற, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில், பணி நாட்களில் நேரிலோ அல்லது மொபைல் எண் 7401703485 மூலம் தொடர்பு கொண்டு பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.