/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீச்சல் பயிற்சி பயிற்றுனர் விண்ணப்பிக்க அழைப்பு
/
நீச்சல் பயிற்சி பயிற்றுனர் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஏப் 14, 2025 04:39 AM
விழுப்புரம்: விழுப்புரம் நீச்சல் பயிற்சி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரத்தில் நீச்சல் விளையாட்டு பயிற்சி மையம், பெருந்திட்ட வளாக நீச்சல் குளத்தில் வர உள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 20 மாணவர்கள், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதத்தில் 25 நாட்களுக்கு தொடர் பயிற்சி வழங்கப்படும். மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மாதம் ரூ.25,000 சம்பளத்தில் பயிற்றுநர் ஒருவர் நியமிக்க உள்ளார். 10 மாத டிப்ளமோ நீச்சல் பயிற்சி முடித்தவர்கள் இப்பயிற்றுனர் பணிக்கு மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 20 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்க முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.