sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு மானியத்துடன் ரூ.5 கோடி கடனுதவி தொழில்முனைவோருக்கு அழைப்பு

/

அரசு மானியத்துடன் ரூ.5 கோடி கடனுதவி தொழில்முனைவோருக்கு அழைப்பு

அரசு மானியத்துடன் ரூ.5 கோடி கடனுதவி தொழில்முனைவோருக்கு அழைப்பு

அரசு மானியத்துடன் ரூ.5 கோடி கடனுதவி தொழில்முனைவோருக்கு அழைப்பு


ADDED : ஆக 24, 2025 10:04 PM

Google News

ADDED : ஆக 24, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு, மானிய கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

சுயதொழில் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நீட்ஸ், யூ.ஒய்.ஜி.பி., அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், பி.எம்.ஈ.ஜி.பி., மற்றும் பி.எம்.எப்.எம்.ஈ., ஆகிய சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவிகளை வழங்கி வருகிறது. இத்திட்டங்களின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் தொழில் திட்டங்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் பெறலாம்.

பண்ணை சார் தொழில்கள் மற்றும் வாடகை வாகனங்கள் வாங்கி இயக்கவும், இத்திட்டங்களின் கீழ் கடன் பெறலாம்.

அரசு திட்டத்தொகையில், 15 சதவிதம் முதல் 35 சதவீதம் வரை மூலதன மானியமாக வழங்குகிறது. ஒரு சில திட்டங்களின் கீழ் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு திட்டத்துக்கும் தனியாக தகுதிகள் வரையறுக்கப்பட்டிருப்பினும் பொதுவாக 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஆர்வமுள்ள நடைமுறையிலுள்ள சட்ட வரன்முறைகளுக்குட்பட்டு, தொழில் துவங்கிட இத்திட்டங்களின் கீழ் பயன் பெறலாம்.

ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், தமது சொந்த அடையாள ஆவணங்கள், துவங்கவுள்ள தொழில்களுக்கான திட்ட அறிக்கை, விலைப்புள்ளிகள் ஆகியவற்றோடு, www.msmeonline.in.gov.in அல்லது kviconline.gov.in/pmegp அல்லது pmfme.mofpi.gov.in தளத்தில் விண் ணப்பங்களைப் பதிவு செய் தால் அவை உரிய பரிசீலனைக்குப் பின் தொழில் முனைவோர் தொழில் துவங் கவுள்ள பகுதிக்குப் பொறுப்பான வங்கிக் கிளைக்கு பரிந்துரைக்கப்படும்.

வங்கி மேலாளர் நிறுவன விதிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பத்தினைப் பரிசீலித்து கடன் வழங்குவது குறித்த முடிவை மேற்கொள்வார். கடன் வழங்க முன் வரும் உரிய மூலதன மானியமும், வட்டி மானியமும் வங்கி வழியாக பயனாளிகளுக்கு தரப்படும்.

இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை அணுகலாம். மேலும் 04146- 223616, 94437 28015, 8925534035, 96988 35117 ஆகிய தொலைபேசிகள் மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us