/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.சி.ஆரில் கேமரா எஸ்.பி., துவக்கி வைப்பு
/
இ.சி.ஆரில் கேமரா எஸ்.பி., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 15, 2025 11:49 PM
மரக்காணம் : மரக்காணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட இ.சி.ஆரில் புதிதாக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் இ.சி.ஆரில் நடக்கும் குற்றசம்பவங்கள், வாகன விபத்துகளை கண்காணிக்க மரக்காணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இ.சி.ஆரில் இரு புறத்திலும் 50 கண்காணிப்பு கேமராக்கள் தனியாருடன் சேர்ந்து போலீசார் வைத்துள்ளனர்.
இந்த அனைத்து கேமராவின் பதிவுகள் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பார்க்கும்படி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.பி., சரவணன் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள கேமராவை திறந்து வைத்து பார்வையிட்டார். கோட்டகுப்பம் டி.எஸ்.பி., உமா, இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சப் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, கதிரவன் உடனிருந்தனர்.