/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புயல், வெள்ளத்தால் பாதிப்பு சான்றிதழ்களை பெற முகாம்
/
புயல், வெள்ளத்தால் பாதிப்பு சான்றிதழ்களை பெற முகாம்
புயல், வெள்ளத்தால் பாதிப்பு சான்றிதழ்களை பெற முகாம்
புயல், வெள்ளத்தால் பாதிப்பு சான்றிதழ்களை பெற முகாம்
ADDED : டிச 27, 2024 06:58 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகாவில் புயல் வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களிடம் மனு வாங்கும் முகாம் நடந்தது.
இம்மாதம் துவக்கத்தில் பெய்த பெஞ்சால் புயல் மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்ததில் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, பத்திரங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
அவர்களுக்கு மீண்டும் புதிய சான்றுகள் வழங்க தமிழக அரசு உத்திரவின் பேரில் நேற்று விக்கிரவாண்டி தாலுகா சித்தலம்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு தாசில்தார் யுவராஜ் தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் வினோத், வி.ஏ.ஓ., அழகானந்தம், உதவியாளர் சதீஷ் அரவிந்தன் உள்ளிட்ட சித்தலம்பட்டு வருவாய் கிராமத்திற்குட்பட்ட வி.ஏ.ஓ., க்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.