/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேரோடு சாய்ந்த மரம் அகற்றப்படுமா?
/
வேரோடு சாய்ந்த மரம் அகற்றப்படுமா?
ADDED : ஆக 26, 2025 06:45 AM
விழுப்புரம் வி.மருதுார் வெங்கடகிருஷ்ணன் தெரு, சித்திரா லே அவுட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த லே அவுட்டில் பொது பயன்பாட்டிற்காக மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த மைதானத்தில் ஓரு மாதத்திற்கு முன் பெரிய மரம் விழுந்தது. அதை அப்புறப்படுத்தக்கோரி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனா ல், நடைபயிற்சி செய்ய முடியாமல் பொதுமக்களும், விளையாட முடியாமல் சிறுவர்களும் அவதியடைகின்றனர். மைதானத்தில் விழுந்த மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.