ADDED : பிப் 28, 2024 11:10 PM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் துணை மின்நிலையத்தில் 16 மொகவாட் திறனாக உயர்த்த்தப்பட்ட பணியினை அமைச்சர் துவக்க வைத்தார்.
திண்டிவனம் துணை மின் நிலையத்தில் 10 மொவாட் திறனை 16 மொகவாட் திறனாக உயர்த்தும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதையொட்டி அமைச்சர் மஸ்தான் உயர்த்தப்பட்ட திறனை பொது மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இதில் நகர்மன்ற சேர்மன் நிர்மலாரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், விழுப்புரம் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, சப்கலெக்டர் (பொ) நர்மதா, செயற்பொறியாளர் சிவசங்கரன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், கவுன்சிலர் ராம்குமார், தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
