/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி
/
பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி
ADDED : ஜன 02, 2025 06:58 AM
மரக்காணம்: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு சென்னைக்கு பைக்கில் சென்ற வாலிபர் கார்மேதி இறந்தார்.
திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காட்டை சேர்ந்த முருகன் மகன் சிபிராஜ்,19; இவர் நேற்று முன்தினம் பைக்கில் புதுச்சேரிக்கு சென்றுள்ளார். பின் அங்கு இருந்த நண்பர் தினேஷ் உடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். அதன் பின் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து திருவேற்காட்டிற்கு இ.சி.ஆர்., வழியாக பைக்கில் வந்தார்.
அப்பொழுது ஜெகநாதபுரம் அருகே சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மாருதி ஷிப்டு கார் சிபிராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் சிபிராஜ் இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

