ADDED : செப் 03, 2025 09:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; கார் மர்மமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சேந்தனுாரை சேர்ந்தவர் செல்வகணபதி, 27; கார் டிரைவர்.
இவர் தனது ரெனால்ட் டிரைபர் காரை, வடவாம்பலத்தில் உள்ள தனது நண்பர் மூர்த்தி என்பவரின் வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் காரும், அதன் அருகில் இருந்த வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதில், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.