/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாஜி அமைச்சரை அவதுாறாக பேசிய யூ-டியூபர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
/
மாஜி அமைச்சரை அவதுாறாக பேசிய யூ-டியூபர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
மாஜி அமைச்சரை அவதுாறாக பேசிய யூ-டியூபர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
மாஜி அமைச்சரை அவதுாறாக பேசிய யூ-டியூபர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
ADDED : அக் 15, 2025 11:22 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகத்தை அவதுாறாக பேசிய யூ-டியூபர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
குடியாத்தம் பகுதியை சேர்ந்த குமரன் என்பவர், தனது யூ-டியூப்பி சேனலில், கடந்தாண்டு டிச., 16ம் தேதி, விழுப்புரம் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி.,யை பற்றி அவதுாறாக பேசி பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை, மறுநாள் 17ம் தேதி தனது மொபைலில் கண்ட அ.தி.மு.க., கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில், குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், யூ-டியூப்பில் அந்த பதிவை நீக்கி, சேனலை முடக்கம் செய்யக் கோரி புகார் அளித்தார்.
மேலும் எஸ்.பி.,க்கு பதிவு தபால் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து சுரேஷ்பாபு விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் 1 ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான வழக்கின் விசாரணை நேற்று வந்தது. இவ்வழக்கில், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ஆஜராகி, புகார் சம்பந்தமான விபரங்களை தெரிவித்தார்.
இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக, இந்த வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி சந்திரகாச பூபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில், அ.தி.மு.க., சார்பில் வழக்கறிஞர்கள் ராதிகா செந்தில், தமிழரசன், பாக்கியராஜ், கலை, இளவரசி, சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகினர்.