/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒருவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
ஒருவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 24, 2025 09:48 PM
விழுப்புரம்; விழுப்புரம் அருகே ஒருவரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த பில்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ், 42; இவருக்கு அதே பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஜெயகணேஷ் அண்ணன் ராஜசேகர், அதே கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன், 50; கிள்ளிவளவன், 23; ஆகியோரிடம் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் 80 ஆயிரம் ரூபாய்க்கு போக்கியம் விட்டுள்ளார்.
கடந்த 9ம் தேதி நிலத்தை ஜெயகணேஷ் பார்த்து விட்டு, வந்துள்ளார். இதையறிந்த சந்திரசேகரன், கிள்ளிவளவன் ஆகியோர், ஜெயகணேஷ் வீட்டிற்குச் சென்று, 'உன் அண்ணனிடம் தானே போக்கியம் வாங்கினோம். நீ ஏன் நிலத்து பக்கம் வந்தாய் என கேட்டு, திட்டி, தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சந்திரசேகரன் உட்பட 2 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.