/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி சீட்டு தகராறு ஒருவர் மீது வழக்கு
/
தீபாவளி சீட்டு தகராறு ஒருவர் மீது வழக்கு
ADDED : ஆக 03, 2025 04:47 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு கட்டியதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ, 43; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக், 42; உறவினர்கள். இவர்கள், கடந்த 2022ம் ஆண்டு, கடலுாரைச் சேர்ந்த செல்வநாயகம் என்பவரிடம், தீபாவளி பண்ட் சீட்டு பணம் கட்டி வந்தனர். அவர் தீபாவளி பண்டுக்கான பொருள்களை தராமல் ஏமாற்றியுள்ளார்.
இளங்கோவிடம், நீ கூறியதால்தான் சீட்டு கட்டினேன் என கூறியதால் அசோக், இளங்கோவிற்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில், அசோக் தாக்கியதில் இளங்கோ காயமடைந்தார்.
புகாரின் பேரில், அசோக் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.