/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது வழக்கு
/
சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது வழக்கு
ADDED : செப் 14, 2025 11:16 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் சொத்து பிரச்னையில் தாயை மிரட்டிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், சீத்தாராமன் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி சரோஜா, 75; மகன் கார்த்திகேயன். இவர், சரோஜாவின் சகோதரி மல்லிகாவின், 77; வளர்ப்பு பிள்ளையாக வளர்த்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மல்லிகா இறந்தார். அவர் இறப்பதற்கு முன், அவரது 3 சென்ட் வீட்டினை கார்த்திகேயனுக்கு எழுதி வைத்துள்ளார்.
மல்லிகா எழுதி வைத்த சொத்தில் பங்கு வேண்டும் என சரோஜா கேட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், அவரை திட்டி, மிரட்டினார்.
சரோஜா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.