/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம் பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
/
இளம் பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஆக 09, 2025 11:23 PM
செஞ்சி: இளம் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
செஞ்சி அடுத்த சிறுனாம்பூண்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகள் நிரோஷா, 22; இவர் செஞ்சியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரும், கவரை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சிவபாரதி 25, என்பவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
சிவபாரதியின் நடவடிக்கை சரியில்லாததால் கடந்த, 3 மாதமாக நிரோஷா காதலை முறித்து கொண்டு அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் நிரோஷா, கடந்த 6ம் தேதி மாலை சிறுனாம்பூண்டியில் உள்ள திருமண மண்டபம் அருகே நின்றிருந்தார். அங்கு இரண்டு நண்பர்களுடன் வந்த சிவபாரதி, அவரிடம் பேச வேண்டும், காதலிக்க வேண்டும் என நிரோஷாவை வற்புறுத்தி தாக்கி, மிரட்டி உள்ளார்.
சிவபாரதி சென்ற பிறகு நிரோஷா தனது கைப்பையை பார்த்த போது அதில் இருந்த 2 சவரன் செயின், 1500 ரூபாய் பணம் காணாமல் போய் இருந்தது.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் சிவபாரதி மற்றும் இரண்டு நண்பர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.