/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காதலித்த பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்குப்பதிவு
/
காதலித்த பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்குப்பதிவு
காதலித்த பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்குப்பதிவு
காதலித்த பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 13, 2025 12:18 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஒன்றாக இருந்த போட்டோவை வெளியிடுவதாக காதலியை மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவராஜா, 29; அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், மாதவராஜா கடந்த 2023ம் ஆண்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர் காதலித்து வந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
இதனையறிந்த மாதவராஜா, சில தினங்களுக்கு முன், தான் காதலித்த பெண்ணை சந்தித்து, நீ திருமணம் செய்து கொள்ளாமல் எனக்காக இருக்க வேண்டும்.
அதனை மீறி திருமணம் செய்து கொண்டால், நாம் ஒன்றாக இருந்த போட்டோவை வெளியிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், வளவனுார் போலீசார், மாதவராஜா வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.