/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., பிரமுகருக்கு சொந்தமான வீடு, ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு
/
பா.ஜ., பிரமுகருக்கு சொந்தமான வீடு, ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு
பா.ஜ., பிரமுகருக்கு சொந்தமான வீடு, ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு
பா.ஜ., பிரமுகருக்கு சொந்தமான வீடு, ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு
ADDED : பிப் 06, 2026 07:12 AM

செஞ்சி: செஞ்சியை சேர்ந்த பா.ஜ., பிரமுகருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கல்லடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், செஞ்சியில், மணல், ஜல்லி விற்பனையும், சினிமா தியேட்டர், லாட்ஜ், பெட்ரோல் பங்க் நடத்தி வருவதுடன், சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை பா.ம.க., சார்பில் வல்லம் ஒன்றிய சேர்மனாக பதவி வகித்தார். இரு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார்.
நேற்று காலை, 9:00 மணியளவில் வல்லம், செஞ்சி, கல்லடிகுப்பம் மற்றும் சென்னை கீழ்கட்டளையில் உள்ள அவரது அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாலை, 5:30 மணி வரை சோதனை நடந்தது. ஏழுமலையின் வங்கி கணக்கில் அதிகளவில் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பதால், இந்த திடீர் ஆய்வு நடந்ததாக தெரிகிறது.