/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி விவசாயிகள் முதல்வருக்கு நன்றி
/
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி விவசாயிகள் முதல்வருக்கு நன்றி
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி விவசாயிகள் முதல்வருக்கு நன்றி
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி விவசாயிகள் முதல்வருக்கு நன்றி
ADDED : பிப் 06, 2026 06:11 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன் கால்திட்டத்திற்கு 42.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியத்திற்கு பாசன விவசாயிகள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
திண்டிவனத்தில் நேற்று முன்தினம் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினை மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், சங்க நிர்வாகிகள் வேல்முருகன், சீனுவாசன், சிவமணி, அசோக் சதாசிவம், சிவராமன், சுரேஷ் ஆகியோர், விவசாயிகள் நலன் கருதி நந்தன் கால்வாய் திட்டத்திற்கு 42.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததிற்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.