/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்பேட்டையில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு
/
மேல்பேட்டையில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு
ADDED : நவ 16, 2025 11:54 PM

திண்டிவனம்: மேல்பேட்டை கிராமத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள மேல்பேட்டை கிராமத்தில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கும் இடமாக இருக்கின்றது.
அந்தப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாமல் இருப்பதால், விபத்து மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து உட்கோட்ட போலீசார் கேட்டுக்கொண்டதின் பேரில் மேல்பேட்டை கிராமம் மற்றும் நெடுஞ்சாலையைஒட்டியுள்ள கிராம நுழைவாயில் பகுதியில் கிராம பஞ்சாயத்து சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டது.
இதற்கான துவக்க விழாவில், திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.,பிரகாஷ் கண்காணிப்பு கேமராவை மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் திறந்து வைத்து பேசினார்.
மேல்பேட்டை பஞ்சாயத்து தலைவர் கவுதமிஇந்திரன் தலைமையில் நடந்த விழாவில், திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் பஞ்சாயத்து துணை தலைவர் மனோன்மணி குமாரசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

