/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதால் தொடர் திருட்டு

ADDED : ஜூன் 25, 2025 01:17 AM

திண்டிவனம் : திண்டிவனம் மேம்பால பஸ் நிறுத்தப் பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதாகி கிடப்பதால், பயணிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், திண்டிவனம் உட்கோட்ட போலீசார், அரிமா சங்கங்கள், பொது நல அமைப்புகள் மூலம் கடந்த சில ஆண்டிற்கு முன்பு திண்டிவனம் மேம்பாலம் பஸ் நிறுத்தம், தாலுகா அலுவலம், நேரு வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்கில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டது.
இதனால் குற்ற சம்பவங்களும் பெருமளவில் குறைந்தது.
சி.சி.டி.வி., கேமராக்கள் போதுமான பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில் செயல்படாமல் முடங்கியது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடமான திண்டிவனம் மேம்பால பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதடைந்து தலைகீழாக தொங்குகிறது.
இங்கு நேற்று முன்தினம் மட்டும் 2 பயணிகளிடம் மொபைல்போன் திருடு போனது. மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதாகி கிடப்பதை தெரிந்து, திருடர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பழுதாகி கிடக்கும் அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களையும் சீரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.