ADDED : ஜூலை 20, 2026 04:15 AM

அ நிறம் | அளவு
வானுார்: வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மேற்பார்வையாளர்களுக்கு, கணக்கெடுப்பாளர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் வானுார் தாசில்தார் லட்சாதிபதி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
பயிற்றுநர்கள் வழங்கிய பயிற்சிகளை மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொருவரும் நன்கு பயன்படுத்தி சரியான தரவுகளை பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
பயிற்றுநர்கள் வேல்முருகன், அய்யப்பன், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், பேராசிரியர் குணசேகரன் மற்றும் மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் என 50 பேர் பங்கேற்றனர்.
