/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய மாவட்ட காங்., மறுசீரமைப்பு கூட்டம்
/
மத்திய மாவட்ட காங்., மறுசீரமைப்பு கூட்டம்
ADDED : நவ 24, 2025 05:47 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., கட்சியின், அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, காங்., மேலிட பொறுப்பாளர்கள் வெங்கட் பல்மூரி, ராணி, மாநில துணை தலைவர் ராமசுகந்தன் தலைமை தாங்கினர். விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் சீனிவாசகுமார், நகர தலைவர் செல்வராஜ், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் தயானந்தம் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய மாவட்ட காங்., கட்சி அமைப்பை மறுசீரமைப்பு தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம், மேலிட பொறுப்பாளர்கள் கலந்துரையாடினர். அப்போது, மாநில நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், சிவா, ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

