/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் செயற்குழு
/
மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் செயற்குழு
ADDED : செப் 14, 2025 01:52 AM

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், கருணாநிதி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக வழக்கறிஞர் சுவைசுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் உட்பட நகர செயலாளர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி, துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், கரூரில் வரும் 17 ம் தேதி நடக்கவுள்ள முப்பெரும் விழாவில் விழுப்புரம் மத்திய மாவட்டம் சார்பில் நிர்வாகிகள், கலைஞர் அறிவாலயத்தில் இருந்து பெருந்திரளாக புறப்பட வேண்டும். வரும் 20ம் தேதி மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.