/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹோலி ஏஞ்சல் பள்ளிக்கு சி.இ.ஓ., பாராட்டு
/
ஹோலி ஏஞ்சல் பள்ளிக்கு சி.இ.ஓ., பாராட்டு
ADDED : மே 09, 2025 01:01 AM

மயிலம்: ரெட்டணை' ஹோலி ஏஞ்சல்' மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை' சி.இ .ஓ., பாராட்டினார்.
இப்பள்ளியில் தேர்வெழுதிய 84' மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி சுனிதா சிங், மாணவர் ராஜதுரை ஆகியோர் 587, ரோஷினி 585, தாரணி 583 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்தனர்.
மேலும் 54' பேர் 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். இயற்பியலில் 19 பேர், வேதியியலில் 7 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 6 பேர், கணிதம் மற்றும் பொருளியல் படத்தில் தலா ஒருவர் என 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை சி.இ.ஓ., அறிவழகன் பாராட்டினார்.
பள்ளி தாளாளர் பழனியப்பன், 'முதுநிலை முதல்வர் அகிலா, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், 'அலுவலர்கள் பாராட்டினர்.