/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செவிலியர் கல்லுாரியில் சான்றிதழ் வழங்கும் விழா
/
செவிலியர் கல்லுாரியில் சான்றிதழ் வழங்கும் விழா
ADDED : ஜன 08, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் செவிலியர் மாணவிகளுக்கு பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
விக்கிரவாண்டி செவன்த் டே ஒய்ட் சமுதாய செவிலியர் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, தாளாளர் திரவிய ராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் அதிசயம் வரவேற்றார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவ அதிகாரி சையத் அபுதாஹிர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் மாணவிகளுக்கு பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கி பேசினர். கல்லுாரி மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
உதவி ஆசிரியை செசன்யா நன்றி கூறினார்.