/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தரமான விதைகள் கிடைக்க சான்றளிப்பு துறை... தீவிரம் 2,392 விதை மாதிரிகள் தரமற்றதாக கண்டுபிடிப்பு
/
தரமான விதைகள் கிடைக்க சான்றளிப்பு துறை... தீவிரம் 2,392 விதை மாதிரிகள் தரமற்றதாக கண்டுபிடிப்பு
தரமான விதைகள் கிடைக்க சான்றளிப்பு துறை... தீவிரம் 2,392 விதை மாதிரிகள் தரமற்றதாக கண்டுபிடிப்பு
தரமான விதைகள் கிடைக்க சான்றளிப்பு துறை... தீவிரம் 2,392 விதை மாதிரிகள் தரமற்றதாக கண்டுபிடிப்பு
ADDED : மே 18, 2025 09:12 PM

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதை சான்றளிப்பு துறை மேற்கொண்ட ஆய்வில், கடந்த நான்கு ஆண்டுகளில் 2,392 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். இம்மாவட்ட விவசாயிகள் ரபி, கரீப், ஜைத் ஆகிய மூன்று பருவங்களில் நெல், மணிலா, உளுந்து மற்றும் சிறுதானிய பயிர்கள், பயறு வகைகளை பயிர் சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் உற்பத்திக்கு விதை அடிப்படையான இடுபொருளாக உள்ளது. நிரந்தர உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு விதை தான் அடிப்படை.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க தமிழக அரசின் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத் துறையின் கீழ் விதைப் பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான விதைப் பரிசோதனை நிலையம், விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
இங்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வக உபகரணங்களைக் கொண்டு விதைகளின் தரம் துல்லியமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு கண்டறியப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தில் நெல், பயறு வகைப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், பருத்தி, காய்கறிகள் மற்றும் இதர பயிர்களை விவசாயிகள், விதை விற்பனையாளர்கள், விதை உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றப்பட்டு, பரிசோதனை செய்து முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது.
விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் 10,563 நெல் விதை மாதிரிகள், 2107 சிறுதானிய விதை மாதிரிகள், 6025 பயறுவகை பயிர்கள் விதை மாதிரிகள், 1850 எண்ணெய்வித்துப் பயிர்கள் விதை மாதிரிகள், 1153 காய்கறி பயிர்கள், 988 பருத்தி விதை மாதிரிகள், 140 இதர விதை மாதிரிகள் என மொத்தம் 22,826 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் 2,392 விதை மாதிரிகள் தரமற்றதாக கண்டறியப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யாமல் தடை செய்யப்பட்டுள்ளது.
தரமான மற்றும் நல்ல முளைப்புத்திறன் விதைகளை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு விதைப்பரிசோதனை நிலையம் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.