/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு
/
பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு
ADDED : அக் 09, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: அரசு பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் மூன்று சவரன் செயினை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த அம்மன் குளத்து மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி கவுசிகா, 27; இவர், கடந்த, 8ம் தேதி பொருட்கள் வாங்க செஞ்சிக்கு வந்தார்.
மீண்டும் மதியம் 1:10 மணியளவில், செஞ்சியில் இருந்து ரெட்டனை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார். ஈச்சூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அவர் கழுத்தில் இருந்த மூன்று சவரன் செயின் திருடு போனது தெரிந்தது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.