/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய பணிகள் தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு
/
துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய பணிகள் தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு
துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய பணிகள் தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு
துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய பணிகள் தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு
ADDED : அக் 10, 2024 04:16 AM

விழுப்புரம்: துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியதாவது,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் மாநில காப்பீட்டு திட்டம், துாய்மை பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் பராமரிப்பு முகவர்கள், துாய்மை பணியாளர்களின் பிரதிநிதிகள், மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்ட தலைவர்கள், தற்காலிக மற்றும் நிறுவனங்களோடு ஆலோசனை செய்யப்பட்டது.
நிரந்தர துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், தினக்கூலி துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கை, இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மருத்துவம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, கடனுதவி குறித்து ஆய்வு செய்தனர்.
பணியாளர்களின் பிடித்த தொகை முழுமையாக பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து, அதற்கான பதிவெண், உறுப்பினர் அடையாள அட்டை, காப்பீடு முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறித்தார்.
பாதாள சாக்கடை திட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பாக பணிகள் மேற்கொள்ள வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய மறைகள், பண பலன்களை காலதாமதமின்றி சரியாக வழங்க வேண்டும். இவர்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதோடு, இவர்களுக்கு தனி மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் மூலம் உள்ள ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு முழு ஊதியம், பிற சலுகைகள் கிடைப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தனியார் நிறுவனம் மூலம் துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை தவிர்த்து நேரடியாகவே அரசு சார்பில் நிறுவனம் ஏற்படுத்தி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், ஏ.டி.எஸ்.பி., தினகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, தமிழ்நாடு அரசு துாய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் கண்ணன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.