/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாணக்யா மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி
/
சாணக்யா மெட்ரிக் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி
ADDED : மே 09, 2025 01:00 AM

திண்டிவனம்:திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 15வது ஆண்டாக பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.
இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 194 பேரும் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து 15வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர் சபரிநாதன் 600க்கு 590 மதிப்பெண், மாணவி மதிவதனி 581, மாணவிகள் தேவஸ்ரீ, ஷரனி, தமிழரசி ஆகியோர்தலா 580 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
கணிதம் பாடத்தில் 28 பேர், கணினி அறிவியலில் 23, வேத்தியிலில் 13, வணிகவியலில் 12, கணினி பயன்பாடு 3, பொருளியலில் 3 பேர் மற்றும் இயற்பியலில் ஒருவர் என 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 500க்கு மேல் 94 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் தேவராஜ், பள்ளியின் முதல்வர் அருள்மொழி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.