ADDED : ஆக 21, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் கலால் பிரிவு போலீசார் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலால் பிரிவு போலீசார் சிலர், சரியாக பணி மேற்கொள்ளாமல், தங்கள் பகுதியில் மது, சாராயம் விற்பனை மீது நடவடிக்கை எடுக்காமல், சட்ட விதிமீறலுக்கு துணை போவதாக புகார் எழுந்தது. இது குறித்து, காவல் துறை அதிகாரிகள் விசாரித்தனர். இந்நிலையில், விழுப்புரம் கலால் பிரிவு காவலர் சசிக்குமார், திண்டிவனம் கலால் பிரிவு காவலர் சபரிநாதன் ஆகியோரை, ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி எஸ்.பி., மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
