/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆந்திரா போலீஸ்காரர் கார் ஏற்றி கொலை முக்கிய குற்றவாளி விழுப்புரம் கோர்ட்டில் சரண்
/
ஆந்திரா போலீஸ்காரர் கார் ஏற்றி கொலை முக்கிய குற்றவாளி விழுப்புரம் கோர்ட்டில் சரண்
ஆந்திரா போலீஸ்காரர் கார் ஏற்றி கொலை முக்கிய குற்றவாளி விழுப்புரம் கோர்ட்டில் சரண்
ஆந்திரா போலீஸ்காரர் கார் ஏற்றி கொலை முக்கிய குற்றவாளி விழுப்புரம் கோர்ட்டில் சரண்
ADDED : பிப் 15, 2024 06:51 AM

விழுப்புரம், : ஆந்திராவில், செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட கள்ளக்குறிச்சி வாலிபர், விழுப்புரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.
ஆந்திர மாநிலம் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அன்னமயா மாவட்டம், பிலேரு அடுத்த குண்டரவாரிப்பள்ளி செக்போஸ்ட் பகுதியில், கடந்த பிப்., 6ம் தேதி இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரை ஓட்டியவர், போலீஸ்காரர் கணேசன்,32; மீது ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
அந்த கும்பலை, ஆந்திர மாநில போலீசார் விரட்டிச் சென்று, காரில் இருந்த திருப்பத்துார் மாவட்டம், சிங்காரப்பேட்டை முருகன் மகன் அருண்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை முருகன் மகன் அஜித் ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக, ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய கள்ளக்குறிச்சி, திருப்பத்துார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மேலும் 6 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியான கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு ஊராட்சி, கீழ்நிலவூர் சின்னையன் மகன் ராமன்,31; நேற்று விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்-2ல் சரணடைந்தார்.
அவரை விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறையில் அடைக்கவும், இதுதொடர்பாக ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் மாஜிஸ்திரேட் அகிலா உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் தொடர்புடைய கல்வராயன் மலை மகேந்திரன், இளையராஜா, கஜேந்திரன், ராஜ்குமார், குமார் ஆகியோரை ஆந்திர போலீசார் தேடி வருகின்றனர்.

