/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாரி மீது பைக் மோதல் சென்னை வாலிபர் பலி
/
லாரி மீது பைக் மோதல் சென்னை வாலிபர் பலி
ADDED : பிப் 17, 2025 01:47 AM
வானுார்: கிளியனுார் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில், சென்னை வாலிபர் இறந்தார்.
சென்னை, செட்டியகரம், விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ மகன் ஆரோன்ஜான், 24; பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் அரவிந்த் திருபாதி, 24; நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு பல்சர் பைக்கில் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கீழ்கூத்தப்பாக்கம் அருகே வந்தபோது டயர் வெடித்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த கிளியனுார் போலீசார், இருவரையும் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஆரோன்ஜான் இறந்தார்.புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.