ADDED : நவ 25, 2024 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில், செஸ் போட்டி நடந்தது.
லயன்ஸ் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் போட்டியை துவக்கி வைத்தார்.
மாவட்ட அளவிலான போட்டியினை, செஸ் பயிற்சியாளர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் வாசுதேவன், தனபால், வேல்குமார், சுந்தரம், ஜெயராமன், வெங்கடேசன், டாக்டர் உஷா உட்பட நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.