/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் இளைஞருக்கு முதல்வரின் மாநில விருது
/
விழுப்புரம் இளைஞருக்கு முதல்வரின் மாநில விருது
ADDED : ஆக 16, 2025 03:30 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு குமார், முதல்வரிடம் இளைஞர் விருதை பெற்றார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு குமார், மனிதம் காப்போம் தொண்டு நிறுவன தலைவராக உள்ளார். இவர், கடந்த 2019ம் ஆண்டு முதல் ரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், அன்னதானம் வழங்குதல், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது சமூக சேவையை பாராட்டி, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் இளைஞர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், விருது, ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசு, பதக்கம், பாராட்டு சான்றிதழை சந்துரு குமாரிடம் வழங்கி கவுரவித்தார்.