/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை அமைச்சர் பொன்முடி ஆலோசனை
/
திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை அமைச்சர் பொன்முடி ஆலோசனை
திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை அமைச்சர் பொன்முடி ஆலோசனை
திண்டிவனத்திற்கு முதல்வர் வருகை அமைச்சர் பொன்முடி ஆலோசனை
ADDED : நவ 18, 2024 06:26 AM

திண்டிவனம் : திண்டிவனத்திற்கு முதல்வர் வருகையையொட்டி, அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக சென்னையிலிருந்து வரும் முதல்வர் ஸ்டாலின், திண்டிவனம் மயிலம் சாலையில் உள்ள ஜே.வி.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறும் விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஒருங் கிணைந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதையொட்டி விழா நடைபெற உள்ள மண்டபத்தில் அமைச்சர் அமைச்சர் பொன்முடி நேற்று வசதிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ள அரங்கம் குறித்து பார்வையிட்டு, வடக்கு மாவட்ட செயலாளர் சேகருடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, நகர செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரமேஷ், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, முன்னாள் நகர செயலாளர் கபிலன், வழக்கறிஞர் அசோகன், கவுன்சிலர்கள் நந்தகுமார், பார்த்திபன், சுதாகர், பரணிதரன் தொண்டரணி பிர்லா செல்வம், வர்த்தகர் அணி பிரகாஷ், நகர துணைச் செயலாளர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
எஸ்.பி., ஆய்வு
எஸ்.பி., தீபக் சிவாச் நேற்று காலை திருமண மண்டபத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., பிரகாஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.