/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருளில் மூழ்கிய நகராட்சி சிறுவர் பூங்கா குழந்தைகள், பெற்றோர் அச்சம்

ADDED : டிச 01, 2025 05:29 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி சிறுவர் பூங்காவில் மின் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளதால் குழந்தைகள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், சிறுவர்கள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் மற்றும் கிரிக்கெட் பயிற்சி, நடைப்பயிற்சி பாதை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இங்கு விழுப்புரம் நகராட்சியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்கி வருகின்றனர்.
மேலும், ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டும், அரசு போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்கள், பெண்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பூங்காவில் கடந்த சில தினங்களாக மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பூங்கா இருளில் மூழ்கியுள்ளதால், குழந்தைகள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, பூங்காவில் மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.