/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 01, 2025 05:30 AM

திண்டிவனம்: திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் பிரதான சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தி வைப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திண்டிவனம் நகர பகுதியில் போதுமான போக்குரவத்து போலீசார் இல்லாததால், அனைத்து பிரதான போக்குவரத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இதில். திண்டிவனம் நகரின் மைய பகுதியில் உள்ள காந்தி சிலை பகுதியில் கல்லுாரி செல்லும் சாலையில் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. இந்த குறுகிய சாலையில் ஒரு பக்கத்தில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைப்பதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காந்தி சிலை பகுதியிலிருந்து அரசு கல்லுாரிக்குச் செல்லும் டவுன் பஸ்கள் மற்றும் ஒரத்தி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் கல்லுாரி சாலை வழியாக செல்கிறது.
இந்த சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றும் போது, அந்த சாலை முழுதும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு அடைத்துக்கொண்டு நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டை வண்டிமேடு வ.உ.சி..திடலுக்கு மாற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
காந்திசிலை பகுதியில் பல்வேறு மார்க்கங்களிலிருந்து வரும் அரசு, தனியார் பஸ்கள் அந்த வழியாக கடந்து செல்வதால், தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.
பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, திண்டிவனம் காந்தி சிலை பகுதியிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டை வ.உ.சி., திடல் பகுதிக்கு மாற்றுவதற்கு, விழுப்புரம் எஸ்.பி., தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

