/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா
/
ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா
ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா
ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா
ADDED : மார் 20, 2025 05:11 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூ. 49 லட்சத்தில் கட்டப்பட்டு, ஓராண்டாக திறக்காமல் இருக்கும் சிறுவர் விளையாட்டு பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி வழுதரெட்டி ஜெகநாதன் போலீஸ் நகரில், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு, இங்கிருந்த காலியிடத்தை பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டத்தில் ரூ. 3 லட்சம் செலவில் சீரமைத்து, ஊஞ்சல், படிப்பகம், இறகுப்பந்து மையம் அமைத்து தற்காலிக பூங்கா ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து, நகராட்சி சார்பில் ரூ. 49 லட்சத்தில் அந்த இடத்தை சீரமைத்து புதிய பூங்கா அமைக்கும் திட்டம் கடந்த 2023ம் ஆண்டு துவங்கினர். பிரம்மாண்ட சுற்றுசுவருடன், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல்கள், சறுக்கு மரம், சீசா, உடற்பயிற்சி கட்டமைப்புகள், நடை பாதை, கார்டன்கள், மின் விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டது.
இந்த பூங்கா பணிகள் முடிந்து ஓராண்டாக திறக்கப்படாமல் மூடி வைத்துள்ளனர். இதனால், நடை பாதையை செடிகள், புற்கள் முளைத்து மூடியுள்ளன. விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தாமல் துருபிடித்து வீணாகி வருகின்றன. நடை பயிற்சிக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்த பூங்கா ஒப்பந்த பணிக்கு, உரிய தொகை அரசு தரப்பில் வழங்கப்படாததால், திறக்கப்படாமல் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால், கலெக்டர் ஆய்வு செய்து, பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.