/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
/
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 26, 2025 05:54 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி மற்றும் பள்ளிகள் சார்பில் கிறிதுஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.
செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயக்குநர் சாந்தி பூபதி குத்து விளக்கேற்றினார். 8ம் வகுப்பு மாணவி நேத்ரா வரவேற்றார். தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி கேக் வெட்டி பள்ளி சிறுவர்களுக்கு வழங்கினார். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கல்லுாரி சி.இ.ஓ., மணிகண்டன், முதல்வர்கள் செந்தில்குமார், கோவிந்தராஜ், சசிகுமார், சுப்ரமணி, விஜயகுமார், உதயசங்கரி, பள்ளி முதல்வர்கள் தனலட்சுமி, ரத்தின கணபதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பொறியியல் கல்லுாரி முதல்வர் பாவேந்தன் நன்றி கூறினார்.
கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் தாளாளர் தலைமை தாங்கி பேசினார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். மாணவர்கள் கிறிதுஸ்மஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி அனைவருக்கும் பரிசு வழங்கினர்.
துணை முதல்வர் மாலதி, பேராசிரியர்கள் கலைமதி, ரஜ்ஜியா, சுகந்தி, கோசலை, பிரதீபா, சுந்தரி, அனுஷியா, திவ்யபாரதி பங்கேற்றனர்.

