/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2025 06:41 AM

விழுப்புரம்: நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து கோலியனுாரில் தி.மு.க.,கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் அருகே கோலியனுார் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார்.
இதில், தி.மு.க., பொருளாளர் ஜனகராஜ், பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் சம்பத், பஞ்சநாதன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, ராஜா, முருகவேல், சந்திரசேகர், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், காங்., கமிட்டி மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், வி.சி.க., மாவட்ட செயலாளர் பெரியார், தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல், பேரூர் செயலாளர் ஜீவா, த.மு.மு.க., முஸ்தாக்தீன், கம்யூ., திலகவதி, சங்கர், ம.தி.மு.க., ராமகிருஷ்ணன், த.வா.க., தீனா உட்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கெடார் கெடார் பஸ் நிறுத்ததில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். காணை தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, மத்திய ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, காங்., மாவட்ட தலைவர் ரமேஷ், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நாகராஜ் சிறப்புரையாற்றினர்.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, ஊதியத்தை குறைத்து மாநில அரசின் மீது நிதிச்சுமையை அதிகரிப்பதாக மத்திய பா.ஜ., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, ம.ம.க., நிர்வாகி அஷ்ரப் அலி, வி.சி., கட்சி சரவணன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் கருணாகரன், ஊராட்சி தலைவர் இந்திரா மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
விக்கிரவாண்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி தொகுதி சிந்தாமணி இந்தியன் வங்கி முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமை தாங்கினார்.
ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பிரவி, ஜெயபால், கில்பர்ட்ராஜ்,மும்மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றிய தலைவர்கள் முரளி, சீனிவாசன்,மாநில பிரச்சார அணி துணை அமைப்பாளர் தேன்மொழி, தொழில் நுட்ப அணி சாம்பசிவம், ஒருங்கிணைப்பாளர் சுந்தர், இளைஞர் அணி பாரதி, பாலகிருஷ்ணன்,காங்., மாவட்ட பொருளாளர் கருணாகரன், நகர தலைவர் குமார், மதிமுக., மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், சி.பி.எம்., மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், சி.பி.ஐ., மாவட்ட துணை செயலாளர் கலியமூர்த்தி, வி.சி.க., மாவட்ட செயலாளர் திலீபன் உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஒலக்கூர் ஒலக்கூர் பி.டி.ஓ.,அலுவலகம் முன்பாக தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், ஒன்றிய கவுன்சிலர் ஊரல்அண்ணாதுரை, வழக்கறிஞர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.,கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

