/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கல்லூரியில் பயிற்சி முகாம்
/
மயிலம் கல்லூரியில் பயிற்சி முகாம்
ADDED : டிச 25, 2025 06:40 AM

மயிலம்: மயிலம் எஸ்.எஸ்.பி.எஸ்., தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் பயிற்சி முகாம் நடந்தது.
கல்லூரியின் வணிகவியல் துறை, கணினி துறையின் சார்பில் நடந்த பயிற்சி முகாமிற்கு மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு துவக்க உரையாற்றினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியை அமுதவல்லி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் மனோகரன் மாணவர்களுக்கு நிதி மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் வீரமுத்து, அருணகிரி செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் உதவி பேராசிரியர் சுதா நன்றி கூறினார்.

