/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
/
திண்டிவனத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
திண்டிவனத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
திண்டிவனத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
ADDED : டிச 25, 2025 06:40 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நகர அ.தி.மு.க.,சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று காலை நடந்த 38 ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சிக்கு, நகர அ.தி.மு.க.,செயலாளர் ரூபன்ராஜ் தலைமை தாங்கினார். திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலாளர்கள் குமார், வடபழனி, விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், எம்.ஜி.ஆர்.மன்றம் ஏழுமலை,ரவி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, வர்த்தகர் அணி தலைவர் செல்லபெருமாள், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் திருப்பதியார்சங்கர், வழக்கறிஞர் திருமுருகன், இளைஞரணி ஜெயவேல், ஜெ.,பேரவை தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

