/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரி மண் சூளைகளுக்கு விற்பனை பொதுமக்கள் போலீசில் புகார்
/
ஏரி மண் சூளைகளுக்கு விற்பனை பொதுமக்கள் போலீசில் புகார்
ஏரி மண் சூளைகளுக்கு விற்பனை பொதுமக்கள் போலீசில் புகார்
ஏரி மண் சூளைகளுக்கு விற்பனை பொதுமக்கள் போலீசில் புகார்
ADDED : அக் 05, 2024 04:13 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே ஏரியில் மண் எடுத்து, சூளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கக்கோரி கிராம மக்கள், போலீசில் புகார் அளித்தனர்.
கண்டமங்கலம் அடுத்த பெரிய பாபுசமுத்திரம் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றவர்கள் பொக்லைன் மூலம் டிப்பர் லாரிகளில் மண் எடுக்கின்றனர். இவர்கள், தோண்டி எடுக்கும் மண்ணை சூளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக ஊராட்சி தலைவர் மற்றும் வி.ஏ.ஓ., விடம் புகார் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்காததால் ஏரியில் மண் கடத்தலைத் தடுக்கக் கோரி கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
அப்போது ஏரி மண் எடுத்து விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.