/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய்மை பாரத திட்ட பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
/
துாய்மை பாரத திட்ட பணி: கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : நவ 15, 2024 05:07 AM

மயிலம்: மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தில் துாய்மை பாரத திட்ட பணிகளை கலெக்டர் பழனி துவக்கி வைத்தார்.
மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் தனி நபர் கழிவறை கட்டும் பணியை துவக்கி வைத்து பேசுகையில், 'மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 19 தனி நபர் கழிவறைகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் 10 ஆயிரத்து 337 கழிவறைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது' என்றார்.
கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் சமுதாய உறிஞ்சிக் குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ், பொறியாளர் பரிமளா உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.