/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடைகால மல்லர் கம்பம் பயிற்சி முகாம் நிறைவு விழா
/
கோடைகால மல்லர் கம்பம் பயிற்சி முகாம் நிறைவு விழா
ADDED : ஜூன் 01, 2025 11:13 PM

விழுப்புரம்:விழுப்புரத்தில் மல்லர் கம்பம் கழகம் சார்பில், 43வது கோடைகால மல்லர் கம்பம் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
கடந்த மே 1ம் தேதி தொடங்கி, ஒரு மாத காலம் கோடை கால மல்லர் கம்ப பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில், 18 மாவட்டங்களைச் சேர்ந்த 150 மாணவ, மாணவியர்களுக்கு பழைய நகராட்சி பூங்காவில், சிறப்பு பயிற்றுனர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமில், மல்லர் கம்பம், சிலம்பம், கயிறு மல்லர் கம்பம், ஜிம்னாஸ்டிக், யோகா, தொங்கு இழை போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
முகாமின் நிறைவு விழா நேற்று நடந்தது. மல்லர் கம்பம் பயிற்சியாளர் ஆதித்தன் வரவேற்றார். தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், தமிழ்நாடு மல்லர் கம்ப நிறுவன தலைவர் உலகதுரை, மாவட்ட விளையாட்டு சங்க ஒருங்கணைப்பாளர் மணி, புதுச்சேரி வாலிபால் சங்க பொதுச் செயலாளர் பெர்லின் ரவி, கேப்டன் அறக்கட்டளை மணிகண்டன், தமிழ்நாடு மல்லர் கம்பம் தலைவர் ஜனார்த்தனன் பங்கேற்றனர்.
முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
பயிற்சி பெற்ற மாணவர்கள் மல்லர் கம்ப சாகசங்கள் செய்து காட்டினர்.