/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மத்திய மாவட்ட தி.மு.க., ரத்த தானம்
/
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மத்திய மாவட்ட தி.மு.க., ரத்த தானம்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மத்திய மாவட்ட தி.மு.க., ரத்த தானம்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் மத்திய மாவட்ட தி.மு.க., ரத்த தானம்
ADDED : பிப் 28, 2026 06:56 AM

விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த முகாமை, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் தலைமை தாங்கி, ரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், மாரிமுத்து, நகர செயலாளர்கள் வெற்றிவேல், ஜெயமூர்த்தி முன்னிலை வகித்தனர். இதில், 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மருத்துவக்குழுவினர், ரத்தம் சேகரித்தனர்.
அப்போது, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், செல்வமணி, ராஜி, ராஜா, சந்திரசேகர், சீனு செல்வரங்கன், திருவக்கரை பாஸ்கர், புஷ்பராஜ், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு , பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய சேர்மன்கள் வாசன், சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சம்பத்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.