/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செண்டூரில் என். எஸ். எஸ்., முகாம் நிறைவு விழா
/
செண்டூரில் என். எஸ். எஸ்., முகாம் நிறைவு விழா
ADDED : பிப் 28, 2026 06:57 AM

விழுப்புரம், மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல், கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.
நிறைவு விழாவிற்கு மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ராஜூவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். முகாம்நிறைவு விழாவில் மயிலம் சிவக்குமார் எம்.எல்.ஏ., வேலூர் பல்கலைக்கழக என். எஸ். எஸ் ., ஒருங்கிணைப்பாளர் விஜயனந்த், மயிலம் கல்லூரி கல்வி நிர்வாக குழு ஆலோசகர் ராஜ் பரத் சிறப்புரையாற்றினர். ஊராட்சி மன்ற தலைவர் முருகன் துவக்க உரையாற்றினார்.
மயிலம் முன்னாள் சேர்மன் தசரதன், பாலசுந்தரம் முன்னாள் கவுன்சிலர் தனுசு, பால் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் சாரங்கபாணி வாழ்த்துரை வழங்கினர். திட்ட அறிக்கையை காஞ்சனா வாசித்தார். திட்ட அலுவலர் வீரமுத்து நன்றி கூறினார்.

