sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 எறையானூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க எம்.எல்.ஏ.,கோரிக்கை

/

 எறையானூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க எம்.எல்.ஏ.,கோரிக்கை

 எறையானூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க எம்.எல்.ஏ.,கோரிக்கை

 எறையானூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க எம்.எல்.ஏ.,கோரிக்கை


ADDED : பிப் 28, 2026 06:57 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி, திண்டிவனம் எறையானூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா விவசாயத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

திண்டிவனம் வட்டம்எறையானூரில் வேளாண்மை துறைக்கு சொந்தமான பரந்த அளவிலான அரசு நிலம் உள்ளது. இப்பகுதியில் விவசாய கல்வி மற்றும் நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒரு வேளாண்மை கல்லூரி அல்லது தோட்டக்கலை கல்லூரி அமைப்பது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் .

இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் வேளாண்மை உயர் கல்வி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.நவீன விவசாய முறைகள் விவசாயிகளிடம் விரைவாக பரப்புவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி மேம்படும்.

எனவே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் எறையானூரில்

உள்ள வேளாண்மை துறைக்கு சொந்தமான நிலத்தினை ஆய்வு செய்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் வேளாண்மை கல்லூரி அல்லது தோட்டக்கலை கல்லூரி அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை மனுவில் எம்.எல்.ஏ.,கூறியிருக்கிறார்.






      Dinamalar
      Follow us