/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான ஊஷூ போட்டி கோயம்புத்துார் மாவட்டம் முதலிடம்
/
மாநில அளவிலான ஊஷூ போட்டி கோயம்புத்துார் மாவட்டம் முதலிடம்
மாநில அளவிலான ஊஷூ போட்டி கோயம்புத்துார் மாவட்டம் முதலிடம்
மாநில அளவிலான ஊஷூ போட்டி கோயம்புத்துார் மாவட்டம் முதலிடம்
ADDED : மே 14, 2025 11:23 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த 22வது மாநில அளவிலான ஊஷூ போட்டியில், கோயம்புத்துார் மாவட்டம் ஒட்டு மொத்த சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
திண்டிவனம் அருகே கருவம்பாக்கம், ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளியில், 22வது சீனியர், ஜூனியர் பிரிவினருக்கான மாநில அளவிலான ஊஷூ போட்டி, கடந்த 10 மற்றும் 11ம் தேதி நடந்தது. இதில் சென்னை, கோயம்புத்தூர், விழுப்புரம் , திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 30 மாவட்டத்தைச் சேர்ந்த 350 மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
சண்டை பிரிவில் கோயம்புத்தூர் மாவட்டம் 12 தங்கம், 3 வெள்ளி, 3 வெங்கலத்துடன் முதலிடமும், திருவள்ளூர் மாவட்டம் 3 தங்கம், 9 வெள்ளி, 8 வெங்கலத்துடன் இரண்டாவது இடமும், தஞ்சாவூர் மாவட்டம் 7 தங்கம் , 2 வெள்ளி, 2 வெண்கலத்துடன் மூன்றாம் இடம் பிடித்தது.
தவுலு பிரிவில் சேலம் 21 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலத்துடன் முதலிடமும் ,வேலூர் மாவட்டம் 20 தங்கம், 11 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 2வது இடமும், கோயம்புத்தார் 16 தங்கம், 12 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 3வது இடம் பிடித்தது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவில், பாபுலாஷா பரிசுகள் வழங்கினார். தமிழ்நாடு ஊஷூ சங்க மாநில செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். தேசிய நடுவர்கள் ரவி, தங்கபாண்டியன், சத்யபீமன், பெகரா, சபீர் போட்டிகளை நடத்தினர்.
ஊஷூ அசோசியேஷன் மாநிலத் துணைத் தலைவர் ஜின்ராஜ், தரம்சந்த் கல்வி குழும பொருளாளர் நவீன் குமார், இயக்குனர் அனுராக், பள்ளி முதல்வர் சாந்தி கலந்து கொண்டனர். ஊஷூ விழுப்புரம் மாவட்ட செயலாளர் நவகோடி நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.