/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோலியனுாரான் வாய்க்கால் சீரமைப்பு பணி: எம்.எல்.ஏ., ஆய்வு எம்.எல்.ஏ., ஆய்வு

ADDED : அக் 16, 2024 07:35 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் வாய்க்கால் சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
நகராட்சி சார்பில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கோலியனுாரால் வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்தது. அதனை எம்.எல்.ஏ., லட்சுமணன் நேரில் பார்வை யிட்டு, அங்கு குடியிருப்புக்குள் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில், வடிகால் வசதியை ஏற்படுத்தவும், அங்கு செல்லும் கோலியனுாரான் வாய்க்காலை முழுதுமாக துார்வாரி சீரமைக்க அறிவுறுத்தினார்.
இதே போல், விழுப்புரம் - திருச்சி சாலை பாண்டியன் நகர், வழுதரெட்டி பகுதியிலும் மழை நீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கமிஷனர் வீரமுத்துகுமார், நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் உட்பட பலர் உடனிருந்தனர்.